வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி

அசுரன் படத்தின் மாபெரும் வரவேற்புக்குப் பிறகு, கிஷோர் மற்றும் சூரி ஆகியோர் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வருகிறது. ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது.இப்படத்தை வெற்றிமாறனே தயாரித்து, இயக்கி வருகிறார். இசையமைப்பாளராக இளையராஜா பணிபுரிந்து வருகிறார். இதற்கான பாடல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துவிட்டார்.இப்படத்தில் பாரதிராஜா, பவானி ஸ்ரீ ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
கடும் குளிரான இடங்களில் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளதால், வெற்றிமாறன் படத்திலிருந்து பாரதிராஜா விலகிவிட்டார்.
இப்போது அந்தப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்க (கெளரவ தோற்றம் ) விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.
முதலில் ‘வடசென்னை’ படத்திலேயே வெற்றிமாறன் – விஜய் சேதுபதி கூட்டணி இணைந்தது. சில நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு, அந்தப் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது குறிப்பிடத்தக்கது.

இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.