பிரிவதை இணைந்து அறிவித்த சமந்தா – நாகசைதன்யா

தமிழகத்தை சேர்ந்த நடிகை சமந்தா தமிழ், தெலுங்குபடங்களில் நடித்து பிரபலமானவர் 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்
இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்கு பிறகு சமந்தா ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். சமந்தா ரூத் பிரபு என்று இருந்த தனது சமூக வலைதள பக்கங்களின் பெயரை நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’என்று மாற்றிகொண்டார்

இந்நிலையில், சமந்தா அக்கினேனி என்ற பெயரை நீக்கிவிட்டு வெறும் ‘S’ என்று தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் சமீபத்தில் மாற்றியது நாக சைதன்யா – சமந்தா ஜோடி விவாகரத்து செய்யவிருக்கிறார்கள் என்ற வதந்தி பரவியது. அதேசமயம், தற்போது ‘சகுந்தலம்’ படத்தில் நடித்து வருவதால் ‘S’ என மாற்றினார் என்றும் சொல்லப்பட்டது.

சமீபத்தில் நடந்த நாகார்ஜுனா பிறந்த நாள் நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்கவில்லை. அதேபோல், அமீர்கானுக்கு நாகார்ஜுனா குடும்பத்தினர் வீட்டில் விருந்து அளித்தனர். இதில் நாகார்ஜுனா,
நாக சைதன்யா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால், சமந்தா மட்டும் கலந்து கொள்ளவில்லை. இதன் மூலமும், இருவரும் விவாகரத்து செய்து பிரியப்போவது உறுதி என தகவல் வெளியானது.

ஆனால் சமந்தா – நாக சைதன்யா தரப்பில் இருந்து இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல், அவர்களது விவாகரத்து தொடர்பாக வெளியான வதந்திகள் மிகுந்த வேதனை அளிப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர்.

இந்நிலையில் நடிகை சமந்தா, தன்னைப் பற்றி தேவையில்லாத வதந்திகளும், அவதூறு செய்திகளும் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது

இந்நிலையில் சமந்தா, நாகசைதன்யா இருவரும் தாங்கள் பிரிவதாக ஒரே மாதிரியான பதிவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளனர் அதில் நீண்ட ஆலோசனைகுப்பிறகு கணவன், மனைவியாக உள்ள நானும் சமந்தாவும்(நாகசைதன்யா – சமந்தா) பிரிந்து தனித்து செல்ல முடிவு செய்துள்ளோம் 10 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாக இருப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது இந்த கடினமான நேரத்தில் நண்பர்கள் நலம் வரும்பிகள், பத்திரிகை மற்றும் ஊடகங்கள் எங்களின் தனிப்பட்ட விஷயத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்
இருவரும் பிரிந்தாலும் எங்கள் நட்பு தொடரும்.எங்கள் தனிப்பட்ட வாழ்வு குறித்த வதந்திகளை பரப்பாமல் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்கள்.