இந்தியன்-2 படப்பிடிப்பில்கொடூரமான
இவ்வளவு பெரிய விபத்தில் கமலுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பதை மட்டும் மக்கள் மத்தியில் நிறுவ முற்பட்டதற்குக் காரணம், தமிழ் சினிமாவின் ஹீரோயிச சென்டிமெண்ட். பெரும்பாலான தமிழ் சினிமாக்களில், சூழ்நிலை எப்படி இருந்தாலும் சரி, ஹீரோ மட்டும் கடைசியில் உயிர் பிழைத்துவிடுவார்.
கமல்ஹாசன் என்ற திரைக்கலைஞனின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படும்படியான சூழல் ஸ்பாட்டில் இல்லை என்று நிறுவ முயல்வதற்குக் காரணம், லைகா நிறுவனத்தின் புரொடக்ஷன் யூனிட்டின் மேல் எவ்வித அவப்பெயரும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது தான்.
தமிழ் சினிமாவில் சமீப காலமாக ஒரு டிரெண்டு உருவாகியிருக்கிறது. அது படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் தானாக வெளியாகிவிடக்கூடாது என்பதும், அனைத்துமே புரொடக்ஷன் யூனிட்டின் புரமோஷன் திட்டப்படியே வெளியாகவேண்டும் என்பதும் தான்.
வெளி மாநில தொழிலாளர்களை வைத்து ஷூட்டிங் நடத்துவதை எதிர்த்து தமிழக தொழிலாளர்கள் போர்க்கொடி உயர்த்தியபோது, ‘மற்றவர்கள் இங்கு வரக்கூடாது என்று நீங்கள் கூறினால். நாளை நீங்கள் வெளியூர் ஷூட்டிங்குக்கு செல்லும்போது டபுள் பேட்டா வாங்குவது நடக்காமல் போகும்.
வெளி மாநில தொழிலாளர்கள் இங்கு வந்து பணிபுரியும்போது அவர்களுக்கான கட்டளைகளைக் கொடுப்பவர் சரியான விதத்தில், அவர்களுக்குப் புரியும்படி கூறவேண்டும். அப்படி கட்டளைகளைக் கொடுப்பவர்களுக்கு அந்தத் தொழிலாளர்களின் மொழி தெரிந்திருக்கவேண்டும்.
விபத்து என்பதே அனைவரின் கவனத்தை மீறி நடப்பது தான் என கமல்ஹாசன் ஒரு உதாரணத்துடன் சொல்லிவிட்டார். ‘மூன்று வருடத்துக்கு முன்பு நான் அந்த இடத்தில் இருந்திருக்கிறேன். காயத்திலிருந்து மீண்டு வருவது எத்தனை கஷ்டம் என்பதை அறிந்தவன் நான்’ என கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
இந்தியன்-2 திரைப்படத்தைப் பொறுத்தவரையில் போஸ்டரில் ராஜ்கமல் நிறுவனத்தின் பெயர் இடம்பெறுவதற்காக கமல் தனது சம்பளத்தைக் குறைத்துக்கொண்டார். மற்றபடி கமல்ஹாசன் தரப்பிலிருந்து புரொடக்ஷனில் யாரும் தலையிடுவதில்லை.