‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்திலிருந்து தொடங்கிய பிரச்சனைகள் சிம்புவை இன்றுவரை விடாமல் துரத்தி வருகின்றன. அண்மையில் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தொடங்கிய ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்பும் சிக்கலை சந்தித்தது. இந்நிலையில் சிம்பு படங்களுக்கு தொடரும் பிரச்சனைகள் குறித்தும், ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்
இது தொடர்பாக சிலம்பரசனிடம் கேட்ட போது, பணமே வரவிட்டாலும் பரவாயில்லை, படத்தைத் தயாரிப்பாளர் வெளியிடட்டும் என்று சொல்லிவிட்டார்.
பணத்தையும் விட்டுக்கொடுத்து, படத்தையும் வெளியிட்ட பிறகு மீண்டும் ஒரு பஞ்சாயத்து வைத்தார் மைக்கேல் ராயப்பன். அதாவது சம்பளமே வாங்காமல் சிலம்பரசன் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்றார்.
‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் வெளியான பிறகு தயாரிப்பாளர் அனைத்து பத்திரிக்கைகளிலும் சிலம்பரசனைப் பற்றி எவ்வளவு தவறாக சொல்ல முடியுமோ சொல்லிவிட்டார்.
ஒரு நடிகருக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்சினை இருக்கும் போது பஞ்சாயத்து கூட்டப்படுகிறது. அதற்கு செல்வமணி சார் ஏன் வந்தார் என்று புரியவில்லை. பெப்சியில் ஏதேனும் பிரச்சினை என்றால் செல்வமணி சார் வருவது நியாயம்.
என்ன தைரியத்தில் இவர்கள் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று கேட்டால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எங்களுடைய பாக்கெட்டில் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.
திமுக கட்சிக்காக பல்வேறு மேடைகளில் பேசியிருக்கிறார். காலை 5 மணி வரை எல்லாம் பேசுவார். ஒரு கட்டத்தில் தொண்டையிலிருந்து ரத்தமாக வரும். அதெல்லாம் பொருட்படுத்தாமல் போய் பேசுபவர் என் கணவர்.