ஐஸ்வர்யா ராஜேஷ் அதிகப்படங்களில்

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து கடந்த ஆண்டு இறுதியில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமான அப்படத்தின் வெற்றி காரணமாக தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது.

கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் தெலுங்கில் உருவாகும் அந்தப் படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துவருகிறார்

இந்த ஆண்டு அவர் நடிப்பில் இதுவரை எந்தப் படமும் ரிலீஸாகாத நிலையில் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துவருகிறார்.

எனவே இந்த ஆண்டு இறுதியிலிருந்து அடுத்த ஆண்டு வரை அவர் நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகவுள்ளன.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அவர் நடிக்கும் க/பெ.ரணசிங்கம் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தை அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்குகிறார்.

தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள ஐஸ்வர்யா அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்க ஐஸ்வர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.