ரஜினி நடிப்பில் அடுத்ததாகத் தயாராகிவரும் படம் ‘அண்ணாத்த’. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிவருகிறது. அஜித்தை வைத்து வீரம், விவேகம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் என தொடர்ச்சியாக நான்கு படங்களைக் இயக்கியவர்தற்பொழுது ரஜினியை இயக்கிவருகிறார்.
.
நாளை ரஜினியின் பிறந்த தினம். தமிழின் உச்ச நடிகர் இவர் .ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகாமல் எப்படி? படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அதற்கான பணிகள் ஒரு பக்கம் போய்க் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
விஜய் ரசிகர்களைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை சன்பிக்சர்ஸ் பொய்யாக்காது என்றே சொல்கிறார்கள். ரஜினியின் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறதா என்பது எப்படியும் நாளை தெரிந்துவிடும்.