ரஜினி நடித்த தர்பார் படம் கடந்த 9ந் தேதி வெளிவந்தது. இந்தப் படத்தில் ரஜினி மும்பை போலீஸ் கமிஷனராக நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார்.
லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. தர்பார் படத்தில் ரஜினிகாந்த் காவல்துறையை இழிவாக சித்தரிக்கிறார் என்று தூத்துக்குடியை சேர்ந்த முன்னாள் பாதுகாப்பு படை வீரர் மரிய மைக்கேல் என்பவர் தூத்துக்குடி 3வது மாஜிஸ்திரேட் கோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
Related Posts
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “தர்பார் படத்தில் சீருடை பணியாளர்களை புண்படுத்தும் விதமாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ரஜினிகாந்த், ஹிப்பி தலை, தாடியுடன் நடித்துள்ளார். நான் கமிஷனர் அல்ல ரவுடி என்று வசனம் பேசுகிறார்
இது போலீஸ் மற்றும் ராணுவத்தினரை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. எனவே இந்த கேரக்டரில் நடித்த ரஜினிகாந்த், முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கு வருகிற 21ந் தேதி விசாரணைக்கு வருகிறது.