விஜய்சேதுபதி–திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர்.

இதற்கு சமந்தா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது
சினிமாவை விட்டு விலகும் அர்த்தத்தில் நான் எதையும் பேசவில்லை. 10 வருடங்களுக்கு மேல் நடிகையாக சினிமாவில் நீடிப்பேன். திரையுலகம் சவால் நிறைந்தது. இங்கு நடிகைகள் தொடர்ந்து இருப்பது கஷ்டம். என்னால் நடிக்க முடியாவிட்டாலும் வேறு ஏதாவது ஒரு வகையில் சினிமாவுடன் தொடர்பில் இருப்பேன்.
தொடர்ந்து நடிப்பதில் கொஞ்சம் இடைவெளி வரலாம். அதை வைத்து சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று யாரும் கருதக்கூடாது.’’
இவ்வாறு சமந்தா கூறினார்.