சுந்தர்சிக்கு வில்லனாகும் ஜெய்

சென்னை 28′ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெய்.
சமீபத்தில் ஜெய்க்கு ஓடிடியில் ‘ட்ரிப்பிள்ஸ்’ வெப் சீரிஸ் வெளியாகியிருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி, சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்திருக்கிறார் இவர் நாயகனாக நடிக்கும் படங்களுக்கு வியாபார முக்கியத்துவம் தற்போது இல்லை
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு -2 படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார் ஜெய். இப்போது, சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் ஜெய்.சுந்தர்.சி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் பத்ரி இயக்கத்தில் உருவான படம் ‘நாங்க ரொம்ப பிஸி’. கன்னடத்தில் வெளியான மாயா பஜார் 2016 படத்தின் தமிழ் ரீமேக் படத்தை பார்த்த சுந்தர் சி மீண்டும் அவருக்கு இரண்டாம் வாய்ப்பு கொடுக்க இருக்கிறார் இந்த படத்தில் அவரே ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் தான், ஜெய் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது