மாஸ்டர் தர்பார் வியாபாரத்தை முந்தியது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் மொத்த வியாபாரமும் முடிந்துவிட்டதாகத் கூறப்படுகிறது. ‘பிகில்’ படத்தின் வியாபாரத்தை விட இப்படத்தின் வியாபாரம் அதிகமாகியுள்ளதாக சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டு உரிமை ரூ.80 கோடி, வெளிநாட்டு உரிமை ரூ.30 கோடி, தெலுங்கு உரிமை ரூ.10 கோடி, கேரளா உரிமை ரூ.9 கோடி, கர்நாடகா உரிமை ரூ.10 கோடி, ஹிந்தி உரிமை, சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை ரூ.25 கோடி, தமிழ் சாட்டிலைட் உரிமை ரூ.30 கோடி, டிஜிட்டல் உரிமை ரூ.20 கோடி, ஆடியோ உரிமை ரூ.5 கோடி ரூ.219 கோடி வரை வியாபாரம் நடைபெற்றிருக்கலாம் என்கிறார்கள்.படத்தின் பட்ஜெட் சுமார் 150 கோடி.
எனவே, வெளியீட்டிற்கு முன்பாகவே சுமார் 70 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
படத்தின் முதல் பார்வை வெளியாகும் முன்பேவியாபாரம் முடிக்கப்பட்டதாம்’மாஸ்டர்’ படத்தின் வியாபாரம்.
தர்பார் 185 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.