விஸ்வரூபம்மெடுத்த மாஸ்டர் மகுடம் சூட்டிய மக்கள்

விஜய் நடித்த படங்களில்
கடந்த பத்தாண்டுகளில் வியாபாரம் முடிந்து விநியோகஸ்தர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு அதன் பின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட படம் மாஸ்டர்

படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் படம் திரைக்கு வரும்வரை எதிர்மறையான செய்திகள் அதிகளவில் பத்திரிகைகளில் வெளியான படம் மாஸ்டர்

2020ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி வெளியாக வேண்டிய ‘மாஸ்டர்’ படம், கொரானா தாக்கத்தால் தியேட்டர்கள் மூடப்பட்டதால், ஒன்பது மாதங்கள் முடங்கியிருந்தது

மாஸ்டர் படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடOTT தளங்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனஏரியா வாங்கிய விநியோகஸ்தர்கள் படத்தின் வியாபார பொறுப்பாளர், நிர்வாக தயாரிப்பாளர் லலித்குமாருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர் பலர் படம் வேண்டாம் என்று ஒதுங்கினார்கள் கொடுத்த பணத்திற்கு வட்டியோடு திரும்பக் கேட்டவர்களும் உண்டு

மாஸ்டர்OTTயில் வந்துவிடும் தியேட்டரில் இந்த படம் வெளிவராது என்ற புரளிகள் தினந்தோறும் தினத்தந்தி செய்திக்கு இணையாக வலம் வரத்தொடங்கின
எல்லாவற்றையும் மெளனமாக கடந்து சென்றனர் நாயகன் விஜய் மற்றும் லலித்குமார் இருவரும் படத்தை தியேட்டரில் மட்டுமே வெளியிடுவது என்பதில் உறுதியாக இருந்தனர்

கொரானா தளர்வுகளுக்குப் பிறகு நவம்பர் 10ம் தேதி தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வரவேயில்லை. அந்த மோசமான நிலையை ‘மாஸ்டர்’ படம் தான் வந்து மாற்ற வேண்டும்என்று
திரையரங்கு உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்சினிமாவில் கொடுத்த வாக்குறுதிக்கு நாணயமாக நடந்துகொள்வது அபூர்வமான நிகழ்வாகவே இருக்கும் அதனை நிகழ்த்தி காட்டியிருக்கிறது விஜய்- லலித்குமார் கூட்டணி

மாஸ்டர் OTT தளத்தில் வெளிவரப்போவதாக கூறப்படுகிறதே என்று நிர்வாக தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கேட்டபோது

கொரானோ என்பது தற்காலிகமானது. இதில் இருந்து உலகம் மீண்டு வருகிறபோது ‘மாஸ்டர்’ திரைக்கு வரும். சினிமாவில் ஒப்பந்தங்களைக் காட்டிலும், கொடுக்கும் வாக்குறுதியை நம்பித்தான் திரையுலகம் இன்றுவரை இயங்கி வருகிறது. அதனைப் பொய்யாக்கிட நாங்கள் விரும்பவில்லை. திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் எங்களுக்கு முக்கியம்.

இளையதளபதி விஜய் இந்த உயரத்தைத் தொட காரணமாக இருந்த தமிழ் ரசிக பெருமக்கள் ‘மாஸ்டர்’ படத்தைத் திரையரங்கில் பார்த்து ரசித்து கை தட்டி மகிழ்வதையே இளைய தளபதியும், நாங்களும் விரும்புகிறோம். எனவே ‘மாஸ்டர்’ முதலில் திரையில், பின்னர் டிஜிட்டல் தளத்தில் என்றார்லலித்குமார்.

திரையரங்கஉரிமையாளர்கள்எதிர்பார்த்தபடியே ‘மாஸ்டர்’ ஜனவரி 13 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிப்பு வெளியான போது உலகம் முழுவதும்தமிழ் படங்களை திரையிடும் தியேட்டர்கள் மத்தியில் நம்பிக்கையும், புத்துணர்ச்சியும் ஏற்பட்டதை வார்த்தைகளால் சொல்லமுடியாத உற்சாக துள்ளல் நிகழ்ந்ததுபடத்திற்கான முன்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களில் எதிர்பார்த்ததை காட்டிலும் டிக்கட் முன்பதிவு அசுரவேகம் பிடித்தது

அரசு அனுமதித்த 50 சதவீத இருக்கைகள்  முற்றிலுமாக நிரம்பின. உலகம். முழுவதும் 70%

திரைகளில் மாஸ்டர் ஜனவரி 13 அன்று அதிகாலையே திரையிடப்பட்டது எட்டு மாதங்களாகவறட்சியில் வறண்டுபோன பூமி போன்று இருந்த திரையரங்குகள் பெரும் மழை பொழிந்து பொங்கிவரும் காட்டாற்றுவெள்ளம் போன்று திரையரங்குகளில் மாஸ்டர் படம் பார்க்க விஜய் ரசிகர்கள் குவிந்தனர்
திரையரங்குகளின் கல்லாக்களில் கனமழை போன்று கரன்சிகள் நிரம்பிவழிந்தது இதற்கு முன்னர் விஜய் படங்களுக்கு நிகழ்ந்தது இல்லை என்கின்றது தியேட்டர் வட்டாரம்

ஜனவரி 13 முதல் 18 வரையிலான முதல் வார முடிவில் டிக்கட் விற்பனை மூலம்100 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியிருப்பதாக விநியோகஸ்தர்கள் – தியேட்டர் வட்டார தகவல் தமிழகத்தில் அதிகபட்ச வசூல் சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய செங்கல்பட்டு விநியோக பகுதியிலும் இரண்டாவது இடத்தை கோவையும், மூன்றாம் இடத்தை மதுரையும் தக்கவைத்துக்கொண்டுள்ளன இந்த மூன்று விநியோக ஏரியாவிலும் சுமார் 55 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியுள்ளது

தொழில்முறை விமர்சகர்கள் மட்டுமேமாஸ்டர் படம் சூப்பர் என சூடம் கொளுத்தி டிவிட்டர், முகநூல், இணையதளங்களில் கோஷம் போட்டார்கள் ஆனால் அதனை காட்டிலும் எதிர்மறையான விமர்சனங்கள் மாஸ்டர் படத்திற்கு ஊடகங்களில் வெளியானது இவற்றையெல்லாம் கடந்து மாஸ்டர் வசூல் ரீதியாக வெற்றிபெற்று மகுடம் சூட காரணம்

நிர்வாக தயாரிப்பாளர் லலித்குமார் தொலைநோக்கு பார்வையும், சமரசமில்லாத வியாபார அணுகுமுறை, இந்த படம் வெற்றிபெறும் என்கிற தன்னம்பிக்கை

எட்டு மாதங்களாக தொலைக்காட்சி, கைபேசிகளுக்கு அடிமைப்பட்டு இருந்த சினிமா ரசிகன் சுதந்திர காற்றை சுவாசிக்க திரையரங்குகள் நோக்கி ஓடி வந்தது

பிகில் 2019 அக்டோபர் 25 அன்று வெளியானது அதற்கு பின் விஜய் நடித்த புதிய படம் திரைக்கு வரவில்லை 14 மாதங்களுக்கு பின் அகன்ற திரையில் தனது மனதுக்கு பிடித்தமான நாயகன் படம் வருவதை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயம் விஜய் ரசிகர்களுக்கு இருந்தது அதனை அரசியல் கட்சிகளுக்கு இணையாக மாஸ்டர் படம் பார்க்கரசிகனையும், வெகுஜன மக்களை தியேட்டருக்கு வரவைக்கும் வேலையை செய்தனர்

ஊதியம் வாங்காத ஊழியர்களாக மாஸ்டர் படத்திற்கான விளம்பர பணிகளை அடிப்படை கடமையாக நிறைவேற்றிய தமிழக ஊடங்கள் இதில் தொலைக்காட்சி, அச்சு ஊடகம், இணையதளம், யூடியூப் தளம் என வேறுபடுத்திப் பார்க்க முடியாது கோடிகளை செலவு செய்தாலும் மாஸ்டர் படத்திற்கு ஊடகங்களில் கிடைத்த கவரேஜ் கிடைக்கவோ, கொண்டுவருவதோ இயலாத காரியம்

திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்கலாம் அதனால் பாதிப்புகள் இல்லை என்பதை மாஸ்டர் படத்தை வெற்றிபெற வைத்ததன் மூலம் உலகத்திற்கு உணர்த்தியிருக்கிறான் தமிழ் சினிமா ரசிகன்