தீபிகா படுகோன் தயாரித்து, நடித்துள்ள சப்பாக் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டு, இன்று வரை அதற்கு எதிராகப் போராடிவருபவர் லக்ஷ்மி அகர்வால். அவரது வாழ்க்கைக் கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் சப்பாக்.
கடந்த ஜனவரி 7ஆம் தேதி டெல்லி ஜேஎன்யு கல்லூரியில் தாக்குதலுக்குள்ளான மாணவர்களை தீபிகா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து ‘சப்பாக்’ திரைப்படத்தைப் புறக்கணிக்க வேண்டும் பலரும் கூறிவந்தனர். அது தொடர்பான ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் டிரெண்டானது.
பல திரைப் பிரபலங்களும் ஜேஎன்யு மாணவர்களுக்கு ஆதரவாகப் பேசிவந்த நிலையில் தனது படத்துக்கு புரமோஷன் தேடுவதற்காகவே தீபிகா அங்கு வந்தார் என்று பலரும் கூறி வந்தனர். ‘
பெரும் எதிர்ப்புக்கு மத்தியிலும், பலரும் தீபிகாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சப்பாக் திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்ட தகவல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.